அலங்காநல்லூர்.
ஜுன்.12 –
மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி
15 வார்டு பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா கோரிக்கை மனுக்களை, பெற்றுக் கொண்டார். பேருந்து நிலையத்தில் விவசாய சங்க நிர்வாகிகள்
நல்லமணிகாந்தி, அழகர்சாமி, தங்கராசு,ஆகியோர் சட்டமன்ற உறுப்பினரிடம் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்க நடவடிக்கை எடுக்க கோரி கோரிக்கை மனுவை வழங்கினார். தொடர்ந்து பாலமேடு, மற்றும் கோணப்பட்டி,சின்னபாலமேடு, சுக்காம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற அவர் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார் தொடர்ந்து மக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தும் கைத்தறி ஆடைஅணிவித்தும் வரவேற்பு அளித்தனர்
சாக்கடைவசதி, மக்களுக்குகுடிநீர், தெருபாலம், சரியான முறையில் மின்சாரம், சாலைவசதி,
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, தேவையான பஸ் வசதி அரசு பள்ளி கட்டிடங்கள், உள்ளிட்ட அடிப்படை தேவைகளை கேட்டு பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையாவிடம்
மனு வழங்கினர். அதனை படித்துப் பார்த்த அவர் அரசு அலுவலர்களை அழைத்துபொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.
தொடர்ந்து பொதுமக்களிடம் எந்த ஒரு குறை என்றாலும் எனது அலைபேசி எண்ணுக்கு தாங்கள் தெரிவிக்கலாம் தங்களுக்காக சட்டமன்றத்தில் தளபதி விஜய்யிடம் கேட்டு பெற்றுத் தர வேண்டியது எனது கடமை என்று கூறினார்.
இதில் தமிழக வெற்றிக் கழக ஒன்றிய செயலாளர் விஜய்ஹரிஷ்,பாலமேடு பேரூர் செயலாளர் புகழ்
வடக்கு ஒன்றிய நிர்வாகிதனசேகரன்,வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் தமிழன்தாமு,மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன்,மற்றும் நிர்வாகிகள் பரத், முருகன்,மாணிக்கம்,
உள்பட பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து வடக்கு ஒன்றிய நிர்வாகி தனசேகரன் பிறந்த நாளை முன்னிட்டு சின்னபாலமேடு பகுதியில்சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா தலைமையில் பிறந்தநாள் கேக்வெட்டி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது.