புவனகிரி ஜூன்
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிய வட்டாட்சியராக ஷானாஸ் பொறுப்பு ஏற்றுக் கொண்டார் புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வந்த தமிழ்ச்செல்வன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பொது நிர்வாக மேலாளராக இடம் மாற்றம் செய்யப்பட்டார்
அவருக்கு பதிலாக நெய்வேலி நிலம் எடுப்பு தனி வட்டாட்சியராக பணியாற்றி வந்த ஷானாஸ் இடம் மாற்றம் செய்யப்பட்டு புவனகிரி புதிய வட்டாட்சியர் பொறுப்பு ஏற்றுக் கொண்டார் அவருக்கு பணி மாறுதலில் செல்லும் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் துணை வட்டாட்சியர்கள் கோவிந்தன், வேல்மணி வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்