தொழில் துறை கழிவு மேலாண்மை சங்கம் சார்பாக நடைபெற்ற இதில்,நூற்றுக்கும் மேற்பட்ட தொழில் துறையினர் பங்கேற்பு கழிவுகளை மறுசுழற்சி செய்வது,மீள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தகவல்
கோவையில் தொழில் துறை கழிவு மேலாண்மை சங்கம் (IWMA) சார்பாக கழிவுகளை சரியான முறையில் மறு சுழற்சி மற்றும் மீள் பயன்பாட்டு திட்டங்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது..
கழிவு மேலாண்மையில் நெட் ஜீரோ என நடைபெற்ற இதில்,நூற்றுக்கும் மேற்பட்ட சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை சேர்ந்தோர் கலந்து கொண்டனர் முன்னதாக நடைபெற்ற கருத்தரங்கின் துவக்க விழாவில் , தொழில் துறை கழிவு மேலாண்மை சங்கத்தின் தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார்..
இதில் சி.ஐ.ஏ.தலைவர் தேவ குமார்,மற்றும் தொழில் துறை கழிவு மேலாண்மை சங்கத்தின் துணை தலைவர் தியாகராஜன்,இணை செயலாளர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் கருத்தரங்கின் நோக்கம் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், தொழிற்சாலை கழிவுகளை பாதுகாப்பாக அகற்ற பல்வேறு விதமான நடைமுறைகளை பின்பற்றுவதாக தெரிவித்தனர்..
குறிப்பாக ஆபத்தான கழிவுகளை கையாளுவதில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அவற்றை மறு சுழற்சி செய்வதாக தெரிவித்தனர் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகள் ஏற்படாதவாறு, அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து செயல்படுவதாக தெரிவித்தனர்..
சட்டவிரோதமாக கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க கழிவு மேலாண்மை சங்கம் தொழில் துறையினரை கண்காணிப்பதாக குறிப்பிட்டனர் கருத்தரங்கில்,தொழில்துறை முன்னோடிகள், அரசு அதிகாரிகள், சிறு குறு நடுத்தர தொழில் துறையினர் கலந்து கொண்டு GreenCo Rating Systems, மத்திய மற்றும் மாநில அரசின் தொழில் சார் திட்டங்கள், தூய்மையான ஆற்றல் மாற்றம், கழிவிலிருந்து வள மீட்பு, சுற்றுச்சுழல் பொருளாதாரம் மற்றும் தொழில்துறைக்கான நிதி மற்றும் மானிய வாய்ப்புகள் குறித்து சிறப்பு அமர்வுகள் நடைபெற்றன..