மாதவரத்தின், தேவை எங்களின் சேவை,
என்ற திட்டத்தின் மூலம் பொதுமக்களின் குறைகளை மனுக்களாகப் பெறும் நிகழ்ச்சியை மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.பிரபு துவக்கி வைத்தார்.

குறிப்பாக மாதவரம், சட்டமன்றத் தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, மனுக்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்யும் விதமாக, மாதவரத்தின் தேவை எங்களின் சேவை , என்ற திட்டத்தினை மாதவரம் சட்டமன்ற அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.பிரபு துவக்கி வைத்தார்.

முன்னதாக நிகழ்ச்சியில் மக்களின் குறைதீர்க்கும் முகாம் குறித்த பொதுமக்களின் குறைகளை மனுக்களாக வாங்குவதற்கு கையேடு மற்றும் சீருடைகளை கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினனார்.

பின்னர் , மனுக்களை பெறும் இடத்தில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து அந்தந்த பகுதி நிர்வாகிகளிடம் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று முகாமை துவக்கி வைத்தார்.

மேலும் இதன் மூலம் மாதம் ஒரு முறை மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 20 க்கும் மேற்பட்ட இடங்களில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று அவர்களிடம் மனுக்கள் பெற்று அதற்கு உரிய தீர்வு காண அரசு அதிகாரிகளிடம் தெரிவித்து தீர்வு காணப்படும் என்றும், சட்டமன்ற அலுவலக வளாகத்தில் மக்கள் காத்துக் கிடந்த காலம் போய் இந்த அரசு மக்களை தேடி வரும் அரசாக செயல்பட இது ஒரு முன்னோட்டமாக திகழும் என தெரிவித்தார்.

இதில் தமிழக வெற்றி கழக மாவட்ட, பகுதி செயலாளர்கள், ஒன்றிய, நிர்வாகிகள் மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *