கரூர் செய்தியாளர் மரியான் பாபு
மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் அணி ஆலோசனைக் கூட்டம்..

கரூர் மாவட்ட அதிமுக கழக அலுவலகத்தில் கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற அணி செயலாளர் அருண் டெக்ஸ் L.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற கரூர் மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர் மன்ற அணி நிர்வாகிகளுக்கான செயல்முறை பயிற்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்க்கு கழக அமைப்பு செயலாளரும்,முன்னாள் அமைச்சர் M.சின்னசாமி
மற்றும் கரூர் மாவட்ட கழக செயலாளர் K.கமலக்கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு கழக வளர்ச்சிப்பணிகளில் கரூர் மாவட்ட இலக்கிய அணியின் செயல்முறைகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.
இக்கூட்டத்தில் மாவட்ட கழக அவைத்தலைவர் திருவிகா, மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் பசுவை சிவசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் ஆகியோர் உள்ளிட்ட எம்.ஜி.ஆர் மன்ற அணி நிர்வாகிகள் கலந்து பலர் கொண்டு சிறப்பித்தனர்.