முதுகுளத்தூர் நிருபர் ஆர் செந்தில்குமார்

தட்டானேந்தல் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு – மக்கள் அவதி


இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழக்கொடுமலூர் ஊராட்சிக்குட்பட்ட தட்டானேந்தல் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நீண்டகாலமாக குடிநீர் தட்டுப்பாட்டால் அவதியடைந்து வருகின்றனர்.

குடிநீருக்காக மக்கள் அண்டை கிராமங்களை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜல்ஜீவன் திட்ட குடிநீர் இணைப்புகளும் பயன்பாடின்றி உள்ளதாக கிராம மக்கள் குற்றம்சாட்டினர். பலமுறை புகார் அளித்தும் தீர்வு கிடைக்காத நிலையில், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் மேல்நிலைத் தொட்டி அமைத்து சீரான குடிநீர் வழங்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *