தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம் பகுதியில் பள்ளி மட்டும் பேருந்து நிலையத்தில் சிங்கப்பெண் அதிரடி விழிப்புணர்வு.

தாராபுரம்

தமிழகத்தில் பெருகி வரும் ஆறு முதல் 60 வயது பெண்களிடம் பாலியல் சீண்டல் மட்டும் பாலியல் புகார் அதிக அளவு வருவதால் புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு சிங்கப்பெண் திட்டத்தை மூலம் பல்வேறு மகளிர் சேர்த்து தடுக்க முயற்சித்து விரிவுபடுத்தி இன்று தாராபுரத்தில் பஸ் நிலையம் மற்றும் தனியார் உதவி பெறும் பள்ளிகளில் சிங்கப்பெண் படையினர் பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தமிழக அரசு 6 முதல் 60 வயது பெண்களிடம் பாலியல் சீண்டல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் புகார் அதிக அளவு வருவதால் புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு சிங்கப்பெண் திட்டத்தை விரிவு படுத்தும் விதமாக இன்று தாராபுரம் காவல் சராகத்திற்கு உட்பட்டு பஸ் நிலையம் மற்றும் சர்ச் சாலையில் உள்ள தனியார் உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிங்கப்பெண் அதிரடிப்படை உதவி இன்ஸ்பெக்டர் பாதம்பிரியா
தலைமையில் பள்ளி மாணவிகளுக்கும் பஸ் நிலையத்தில் உள்ள பெண்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி குழந்தைகளுக்கு பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நிகழ்ச்சியும் பஸ் நிலையத்தில் உள்ள பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது ஏற்படும் குற்றங்கள் குறித்து கட்டுப்பாட்டு மையம் 100 என்ற எண்ணுக்கு அழைத்தால் உடனடியாக சிங்கப்பெண் அதிரடிப்படையில் இருந்து சம்பவ இடத்திற்கு வந்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தேவையென்றால் சட்டப்படியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று உரிய தீர்வு எட்டப்படும் என கூறினார். மேலும் மாணவிகள் இருசக்கர வாகனத்தை உபயோகப்படுத்தக்கூடாது அவ்வாறு உபயோகப்படுத்தினால் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *