தஞ்சாவூர் :இசைச்சாரல் சார்பில் இசை இலக்கிய சங்கமம் நிகழ்ச்சி பெசண்ட் அரங்கத்தில் நடந்தது.
நிகழ்ச்சியை மங்கையர்க்கரசி வரவேற்றார். யோகம் செழியன் தலைமை வகித்தார். ஆசீவகத் தமிழ்ச் சித்தர் கண்ணன் அடிகள் அருளாசி வழங்கினார். மருத்துவர் ஜெய.ராஜமூர்த்தி சிறப்புரை ஆற்றினார். பாம்பே ஸ்வீட்ஸ் சுப்பிரமணிய சர்மா, மஹாராஜா ஆசிப் அலி, துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்
காலை முதல் மதியம் வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பாடகர்கள் திரைப்பாடல்கள் பாடினார்கள்.மறைந்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. யுவராஜன், கும்பகோணம் புண்ணியமூர்த்தி, கவிஞர் சுமித்ரா சத்தியமூர்த்தி, குழந்தை மருத்துவர் அரவிந்தன் குணசேகரன், கவிஞர் நீடா.சி.இளஞ்செழியன், பேராசிரியர் பாலகிருஷ்ணன், இயற்கை விவசாயி சுதாகர், பேச்சாளர் வாசு.சசிகுமார், பதிப்பாளர் அதம்பை ராமமூர்த்தி, நாவலாசிரியர் குமார் ஆகியோருக்கு கங்கா பஞ்சாபகேசன் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், இசை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இசைச்சாரல் நிறுவனர் ராகவ் மகேஷ் செய்திருந்தார்.