அலங்காநல்லூர்
ஜூன் 16-
மதுரைமாவட்டம் அலங்காநல்லூர்
கேட்கடை தனியார் மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இளஞ்சிறுத்தை
எழுச்சி பாசறையின் புதியபொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில்
இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில செயலாளர் ஊர்சேரி சிந்தனைவளவன், தலைமை தாங்கினார். விசிக துணைப் பொதுச் செயலாளர் வே.கனியமுதன், கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
முன்னதாக புதிய பொறுப்பாளர்களுக்கு கட்சியின் நிர்வாகிகள் கைத்தறி ஆடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர். இதில் மாவட்ட, ஒன்றிய, நகர கிளைக் கழக தொகுதி,பொறுப்பாளர்கள் நியமனம் செய்வது கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியில் சமூகநீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள வன்னியரக்கு வாழ்த்துக்களையும் நன்றி தெரிவிக்கப்பட்டது. வரும் ஜூன்18முடக்காத்தான் பாண்டி நினைவு நாள் மற்றும் ஜூன் 30மேலவளவு போராளிகள் நினைவு நாள் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரும் தலைவர் தொல் திருமாவளவன், அவர்களை இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை சார்பில் நிர்வாகிகள் 25க்கு மேற்பட்ட வாகனங்களில் சென்று உற்சாக வரவேற்பு கொடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சி முடிவில் பேரூர் செயலாளர்ராமதாஸ், கூறினார்.