தென்காசி ஜூன் 15 –

தென்காசி மாவட்டம்
தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகம் அமைந்துள்ள சிவந்தி நகர் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ராஜகோபாலபேரி பகுதியைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வே. ஜெயபாலன் தலைமையிலும், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் முன்னிலையிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.


நிகழ்ச்சியில் புதிதாக கழகத்தில் இணைந்த இளைஞர்களை மாவட்ட செயலாளர் வே. ஜெயபாலன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வரவேற்று வாழ்த்தினர். தொடர்ந்து, கழகத்தில் இணைந்த இளைஞர்களுக்கு கருப்பு-சிவப்பு வேஷ்டி அணிவித்து வரவேற்று கௌரவித்தனர்.


மேலும், கழகத்தின் கொள்கைகள், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சமூகநீதிக் கொள்கைகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் இளைஞர்கள் தீவிரமாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.


இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் சீனித்துரை, ஜே.கே. ரமேஷ், ஷேக் முகமது ஆகியோர் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *