திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக புகார் மனு வழக்கறிஞர்கள் சங்க தலைவர்.குமரேசன் தலைமையிலான வழக்கறிஞர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில் வழக்கறிஞர் சங்க உறுப்பினர் வழக்கறிஞரை கடந்த 25-ம் தேதி நீதிமன்ற கிழக்கு வாயில் பகுதியில் தாக்குதல் நடத்தியது தொடர்பாக தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒருவரை கைது செய்தனர்.
மேலும் முக்கிய குற்றவாளிகளான 2 பேரை கைது செய்ய வலியுறுத்தியும், இந்த இரண்டு பேரால் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.