தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக பணியாற்றி வரும் கம்பம் என். இராமகிருஷ்ணன் அவர்களின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் துணிந்து நில் அறக்கட்டளை தலைவர் டாக்டர் எம். வேல் பாண்டியன் கலந்துகொண்டு, கம்பம் என். இராமகிருஷ்ணன் அவர்களுக்கு நினைவு பரிசாக வீரவாளை வழங்கி கவுரவித்தார்.
மக்கள் சேவையில் தொடர்ந்து சிறந்து விளங்கவும் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்” என டாக்டர் எம். வேல் பாண்டியன் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் துணிந்து நில் அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.