…
இஸ்லாமிய சிறைவாசிகள் வழக்குகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விடுதலை செய்யக்கூடாது என வலியுறுத்தி, சக்திசேனா இந்து மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் அன்புமாரி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமாரி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் சமீபத்தில் அளித்த பேட்டியில், இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
மேலும், பொதுவான குற்றங்களில் தண்டனை அனுபவித்து நன்னடத்தை அடிப்படையில் விடுதலை பெறுவோருக்கு எதிர்ப்பு இல்லை என்றாலும், வெடிகுண்டு வெடிப்பு, அரசியல் தலைவர்கள் படுகொலை மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்ட இஸ்லாமிய சிறைவாசிகள் என்ற பெயரில் விடுதலை செய்யக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்வது மாநிலத்தின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொண்டு இதுபோன்ற விடுதலைகளை அரசு பரிசீலிக்கக் கூடாது என்றும் அப்படி பரிசீலனை மேற்கொண்டால் மத்திய சிறை சாலை முன்பு மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தார்.