தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 374 கோரிக்கை மனுக்கள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 374 கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் இரா. வைத்திநாதன் பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்

இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை புதிய வீட்டுமனை பட்டா வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என 374 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் பொது மக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்

இதனைத் தொடர்ந்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல துறையினர் சார்பில் 2.மாற்றுத் திறனாளிகளுக்கு ரூபாய் 3250 மதிப்பிலான ஊன்று கோல்களை மாவட்ட கலெக்டர் இரா வைத்தி நாதன்வழங்கினார்

முன்னதாக முதியோர்களுக்கான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழியினை மாவட்ட கலெக்டர் தலைமையில் அரசு அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக் கொண்டனர்.

இதன் பின்னர் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பாக பசுமை பரப்பை அதிகரித்தல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலம் நிலை பாதிப்புகளை குறைக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் அவர்கள் விவசாயிகளுக்கு பணம் பனை மரக் கன்று களை வழங்கினார்இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப . ராஜகுமார் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமகிருஷ்ணன் பொது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கதிர்வேல் நிலம் உதவி ஆணையர் பஞ்சாபகேசன் தனித்துணை ஆட்சியர் கவிதா சா.ப.தி. உதவி ஆணையர் பஞ்சாபகேசன் கலால் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி சமூக நல அலுவலர் விஷ்ணு பிரியா மாவட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் ஏ. எடிசன் பசுமை தோழா அப்சனா உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *