மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம்

தென்காசி ஜூன் 15

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள கண்ணு புலிமெட்டு இயற்கை சூழ்ந்த எழில் மிகு பகுதியாகும் இந்த நீர்த்தேக்கம் ஆனது பொதிகை மலை உற்பத்தியாகிய நீரானது பல்வேறு கிளைகளாக பிரிந்து நீர்வீழ்ச்சிகளாக மாறி கண்ணுபுளி மெட்டு பகுதிக்கு வந்து செல்கிறது

இந்த நீர்த்தேக்கத்திற்கு கண்ணு புலி மெட்டு என்னும் பெயர் தாங்கி நிற்கிறது இங்கு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பாக சிறந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பினும் இந்த அணையானது கடந்த தினங்களாக பெய்த மழையின் காரணமாக முழு கொள்ளளவை இயற்றிய நிலையில் இந்த அணையில் பாதுகாப்போடு சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியூட்டும் நிலையில் இயற்கை அழகை ரசித்தவாறு படகு சவாரி ஏற்படுத்தப்பட்டுள்ளது

தனிநபருக்கு ரூபாய் 50 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் லைஃப் ஜாக்கெட் பொருத்தப்பட்டு இயற்கை அழகை கண்டவாறு அணையை சுற்றிவரும் காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளின் நகரமாக இருக்கும் நிலையில் கண்ணு புலி மெட்டு பகுதியில் இருக்கும் தனியார் நீர்வீழ்ச்சிகளிலும் மக்கள் குளித்து மகிழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *