கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் அப்போலோ மருத்துவமனையின் இமாலய சாதனை..


மரணத்தின் பிடியில் இருந்து மீண்ட தந்தை; இரண்டு பெண் குழந்தைகளின் கண்ணீரைத் துடைத்த ‘கடவுள்’ மருத்துவர்!
“தலைக்காயங்களில் ஒவ்வொரு நொடியும் ஒரு யுகம்” காலத்தே செய்த அறுவை சிகிச்சையால் புதுவாழ்வு பெற்ற 45 வயது குடும்பத் தலைவரின் நெஞ்சை நெகிழவைக்கும் நிஜக் கதை..
‘விதி’ சில நேரங்களில் மொத்த மகிழ்ச்சியையும் பிடுங்கி எறியப் பார்க்கும். ஆனால், அந்த விதியையும் வெல்லும் ‘மறுபிறவி’ என்ற பேரதிசயம் மருத்துவ உலகத்தால் சாத்தியமாகிறது.கரூர் அப்போலோ மருத்துவமனை கோமா என்னும் இருண்ட உலகிற்குள் சென்று மீண்டுள்ள45 வயது தந்தைக்குப் புதுவாழ்வு தந்துள்ளார் பிரபல மூளை மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.பி. தமிழானந்த்.கொடூர விபத்தும் ‘கோல்டன் ஹவர்’ முக்கியத்துவமும்
45 வயது ஒருவர் கோரச் சாலை விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மூளையில் கடுமையான ரத்தக் கசிவு உண்டானது. சம்பவ இடத்திலேயே சுயநினைவை இழந்த அவரை, குடும்பத்தினர் கரூர் அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர்.


நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த டாக்டர் எம்.பி. தமிழானந்த், உடனடியாக ‘எமர்ஜென்சி டிகம்ப்ரசிவ் கிரானியோடமி’ என்ற அவசரக்கால மூளை அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். மூளையின் வீக்கத்தைக் குறைக்கவும், தேங்கியுள்ள ரத்தக் கட்டுகளை அகற்றவும் மண்டை ஓட்டின் ஒரு பகுதி தற்காலிகமாக அகற்றப்பட்டது.


50 நாள் தீவிரப் போராட்டத்திற்க்கு பின்அறுவை சிகிச்சை முடிந்தாலும், அவர் ‘கோமா’ நிலைக்குச் சென்றார்.ஒரு நொடி கூடக் கண் அசராமல் ஐசியூ மருத்துவக் குழுவினர் அவரைப் பராமரித்தனர்.
11-வது நாள்அவர் மெதுவாகத் தனது கண்களைத் திறந்தார்.


கண் விழித்த போதிலும்,மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக உடலின் ஒரு பகுதி முற்றிலும் முடங்கிப் போயிருந்தது.தொடர்ந்து 50 நாட்கள் மருத்துவமனையிலேயே வைத்து தீவிர முறையான பிசியோதெரபி சிகிச்சைகள் வழங்கப்பட்டன. பிசியோதெரபி நிபுணர்களின் முயற்சியால் அவரது கைகள், கால்கள் மெதுவாக அசைந்து, பக்கவாதத்தின் பிடியில் இருந்து விடுதலை பெற்றார்.
விபத்து நடந்து 5 மாதங்கள் கடந்த நிலையில், மூளையைப் பாதுகாப்பதற்காக தற்காலிகமாக அகற்றப்பட்ட மண்டை ஓட்டின் பகுதியை மீண்டும் பொருத்தும் ‘கிரானியோபிளாஸ்டி’ சிகிச்சையையும் டாக்டர் எம்.பி. தமிழானந்த்செய்து முடித்தார்.தற்ப்போதுமுற்றிலும் நலமடைந்து, தனது கடமைகளை தானாகவே செய்யத் தொடங்கியுள்ளார்.


சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட மருத்துவ முடிவும், அப்போலோ மருத்துவக் குழுவின் அர்ப்பணிப்பும் இன்று இரண்டு பெண் குழந்தைகளின் வாழ்வில் மீண்டும் ஒளியேற்றியுள்ளது.என்பது குறிப்பிதக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *