தென்காசி, ஜூன் 17

செங்கோட்டையில் அமைந்துள்ள ​இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வீர வாஞ்சிநாதன் நினைவு 115 ஆவது தினத்தை முன்னிட்டு, செங்கோட்டையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கும்,
மேலும் செங்கோட்டையில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கும் தென்காசி மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


​இந்நிகழ்வில்,செங்கோட்டை நகரக் கழகத்தின் நகரச் செயலாளர் பிரம்மகிருஷ்ணா (எ) ஆனந்த், தலைமையிலும் அனுசரிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் நகர இணைச் செயலாளர் சிவகுமார், நகரப் பொருளாளர் எபின், நகர துணைச் செயலாளர் சரவணன் மற்றும் நகர செயற்குழு உறுப்பினர்கள் ஹரிஹரன், மணிகண்டன்​மேலும், தென்காசி மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பாக மாவட்ட,பேரூர் மற்றும் ஒன்றியக் கழகப் பொறுப்பாளர்களும், செங்கோட்டை நகரக் கழகத்தின் பிற முக்கிய நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் இந்நிகழ்ச்சியில் திரளாகக் கலந்துகொண்டு, வாஞ்சிநாதனின் தியாகத்தைப் போற்றும் வகையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *