​கோவை மசக்காளிபாளையத்தில் உள்ள ஹர்ஷா மஹாலில் தமிழக வெற்றிக்கழகத்தின் கோவை கிழக்கு மாவட்டம் சார்பில் மாபெரும் மாற்றுக்கட்சியினர் இணையும் விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் பாலமுரளி கிருஷ்ணன் மற்றும் அபய் கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் v.சம்பத்குமார் அவர்கள் முன்னிலை வகித்து, மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களை சால்வை அணிவித்து கட்சியின் கொள்கை முழக்கங்களோடு தவெக-வில் வரவேற்று இணைத்துக் கொண்டார்.


​இந்த எழுச்சிமிகு விழாவில் கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் யுவராஜ், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிரி பிரசாத் மற்றும் பகுதி செயலாளர் சரத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் தவெக முக்கிய நிர்வாகிகளான வைரமணி, போனஸ் பாபு, உமா மகேஷ்வரி, மணிகண்டன், அமிர்தலிங்கம், இந்திராமணி, ஜார்சல் பீட்டர், நாகராஜ், சுரேஷ்பாபு, மற்றும் சி.கே. புவனேஷ்ராஜ் உள்ளிட்ட மாவட்ட, பகுதி, வட்டார அளவிலான கட்சி நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மாற்றுக்கட்சியினரின் இந்த அதிரடி வரவு கோவையில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு மேலும் பெரும் பலத்தை சேர்த்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *