கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூரில் சாதாரண திரையரங்கமான திண்ணப்பா திரையரங்கத்தை மல்டிபிளக்ஸ் திரையரங்கம் என கூறி கடந்த 5 மாதங்களில் 3 முதல் 5 கோடி வரை மக்கள் பணத்தை கொள்ளையடித்ததாகவும், அதனை ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனக் கூறி பாமக கரூர் மாவட்ட செயலாளர் பிரேம்நாத் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாமக கரூர் மாவட்ட செயலாளர் பிரேம்நாத் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கரூர் மேற்கு பிரதட்சணம் சாலையில் அமைந்துள்ள திண்ணப்பா திரையரங்கம் செயல்பட்டு வருவதாகவும், இந்த திரையரங்கம் சாதாரண திரையரங்கம் என்றும், திண்ணப்பா திரையரங்கம் ஸ்கிரீன் 1ல் 516 இருக்கைகளும், ஸ்கிரீன் 2ல் சுமார் 179 என மொத்தம் 695 இருக்கைகள் மட்டுமே உள்ளதாகவும், இதனை மல்டி பிளக்ஸ் என கூறிக் கொண்டு சாதாரண திரையரங்கிற்கு வசூலிக்க கூடிய 100 ரூபாய்க்கு பதிலாக, மல்டி பிளக்ஸ் திரையரங்கம் அங்கீகரித்து 150 முதல் 200 ரூபாய் வரை கடந்த 5 மாதங்களாக 3 முதல் 5 கோடி வரை வசூலுத்து இருப்பதாகவும், கடந்த ஆட்சி காலத்தில் இருந்த அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் துணையுடன் இந்த கொள்ளை நடைபெற்று இருப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் திரையரங்கை ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும்,அவர்களிடம் அபராதம் விதித்து முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்றும்,15 நாட்களுக்குள் ஆட்சியர் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்தார்.உடன் கிழக்கு மாவட்ட செயலாளர் சரவணன் மற்றும் பாமக நிர்வாகிகள் உடனிருந்தனர்.