ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் நிறுவனர் மு.ரா. அரவிந்தன் ஆணைக்கிணங்க தருமபுரி மாவட்டத்தின் சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் மெயின் ரோடு, நாய்க்கன் கொட்டாய் , HP பெட்ரோல் பங்க் எதிரில் ல் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி மாவட்ட தலைவர் . கணேசன் , தருமபுரி மாவட்ட செயலாளர் பிரபு மாவட்ட செயலாளர், தருமபுரி மாவட்ட துணை தலைவர் ஆதிமூலம் அவர்கள் தலைமை தாங்கினார்கள். தருமபுரி மாவட்ட துணை செயலாளர்.நெடுஞ்செழியன், தருமபுரி மாவட்ட பொருளாளர் அருண் , தருமபுரி மாவட்ட அமைப்பாளர்மணி அவர்கள் முன்னிலை வகித்தனர்.

கோடை வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு பெட்ரோல் பங்கில் பணிபுரியும் பணியாளர்களுக்கும்,சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கும் நீர் மோர் வழங்கப்பட்டது.

இந்த சமூக நலப்பணியில் மாநில பொது செயலாளர் எம்.பி. நந்தகுமார்,மாநில செயலாளர் ரவிசங்கர்,மாநில துணை தலைவர் செல்வகுமார், மாநில துணை செயலாள மாரிதேவி,
மாநில அமைப்பு செயலாளர் ஜி. சங்கரன், மாநில கொள்கை பரப்பு செயலாளர். ஜி. தனேஷ்குமார், மாநில பொருளாளர் எம். சரத்பாபு மற்றும் தருமபுரி மாவட்ட ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

மேலும் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அறக்கட்டளை தொண்டர்கள் திரளாக பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.மனிதநேயம் மற்றும் சமூகப் பணிகளை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை, தொடர்ந்து பல்வேறு சேவைத் திட்டங்களையும் ,உதவிகளையும் முன்னெடுத்து வருவதாக நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றனர். .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *