மாமன்ற வளாகத்திற்குள் வாக்குவாதம்” ; கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் படம் வைக்கப்பட்டதால் சலசலப்பு – தி.மு.க – காங்கிரஸ் கவுன்சிலர்கள் நேருக்கு நேர் மோதி முழக்கமிட்டதால் பரபரப்பு !!!
“முன்னாள் முதல்வர்களின் படங்களையும் மாட்டிக் கொள்ளலாம்”- அரசாணையைச் சுட்டிக்காட்டி கமிஷனர் கட்டா ரவி தேஜா அறிவிப்பு ….
“கோவை மாநகராட்சி மாமன்றச் சாதாரணக் கூட்டம் இன்று பரபரப்புடன் கூடிய வேளையில், மாமன்ற வளாகத்திற்குள் தற்போதைய முதலமைச்சர் விஜய் அவர்களின் புகைப்படம் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தி.மு.க. மற்றும் காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள் தங்களது கட்சித் தலைவர்களின் படங்களையும் வைக்கக் கோரி மாமன்றத்திற்கு உள்ளேயே போராட்டத்தில் குதித்தனர்.
இரு தரப்பினரும் முழக்கங்களை எழுப்பியதால் மாமன்ற வளாகமே போர்க்களமாக மாறி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.”
கோவை மாநகராட்சி மாமன்றத்தின் சாதாரணக் கூட்டம் இன்று காலை மாமன்ற வளாகத்தில் தொடங்கியது. கூட்ட அரங்கின் வளாகப் பகுதிகளில் தற்போதைய தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் படம் முறைப்படி வைக்கப்பட்டு இருந்தது.
இதனைப் பார்த்த தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் திடீரென ஆக்ரோஷம் அடைந்து மாமன்ற வளாகத்திற்குள் அதிரடிப் போராட்டத்தில் குதித்தனர்.
“மாமன்ற வளாகத்தில் தற்போதைய முதலமைச்சர் விஜய் படம் இருக்கும் போது, திராவிட மாடல் அசைக்க முடியாத தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் படத்தையும் உள்ளே வைக்க வேண்டும்” என தி.மு.க மன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கினர். அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் தங்களது பங்கிற்கு, “கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் படத்தையும் மாமன்ற உள்கட்டமைப்பிற்குள் உடனடியாக மாட்ட வேண்டும்” என தர்ணாவில் ஈடுபட்டனர்.
“காங்கிரஸே ஒழிக! தி.மு.க ஒழிக!” – நேருக்கு நேர் மோதிய கவுன்சிலர்கள்:
இந்த போராட்டத்தின் போது, இரு தரப்பு உறுப்பினர்களுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டு தி.மு.க மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் “காங்கிரஸ் ஒழிக!” என்று கோஷங்களை எழுப்பினர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து “தி.மு.க ஒழிக!” எனத் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
இரு கட்சியினர் இடையே மாமன்றத்திற்குள் நேருக்கு நேர் மோதி முழக்கமிட்ட சலசலப்பு ஏற்பட்டது.
மாமன்றத்திற்குள் பரபரப்பு நிலவியதைத் தொடர்ந்து, கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா உடனடியாகக் நிலைமையை அசாத்தியமாகச் சமாதானப்படுத்தும்
“தமிழ்நாடு அரசின் அதிகாரப் பூர்வ விதிகளின்படி, முன்னாள் முதலமைச்சர்களின் திருவுருவப் படங்களையும் அரசு மற்றும் மாமன்ற வளாக உள்கட்டமைப்பிற்குள் வைக்கலாம் என்ற அரசாணை நடைமுறையில் உள்ளது.
எனவே, விதிகளுக்குட்பட்டு முன்னாள் முதலமைச்சர்களான மு.க.ஸ்டாலின் மற்றும் காமராஜர் ஆகியோரின் புகைப்படங்களையும் மன்ற வளாகத்திற்குள் மாட்டிக் கொள்ளலாம்” என்று முடியாத சட்டத் தீர்வை முன்வைத்தார்.