அம்மணம்பாக்கம் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி செங்கல்பட்டு எம்.எல் ஏ வழங்கினார்


கல்பாக்கம் ஜூன் 19–
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம்,குமிழி ஊராட்சி. அம்மணம்பாக்கம் கிராமத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக, பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

இதில், சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.தியாகராஜன் பங்கேற்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கிராம பொதுமக்கள் சிமென்ட் சாலை அமைத்தல், புதிய மின்மாற்றி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி,மினி டேங்க் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜனிடம் வழங்கினர். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக சட்ட மன்ற உறுப்பினர் உறுதி கூறினார்


இதில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பிரவீன் ராஜ், பிரசாத், அசரியா, ஜானி, ஜேம்ஸ் குமார், குமிழி சுந்தர், குமரன், ஆபிரகாம், சாம்சன், எமர்சன், நிஷாந்த் உட்பட பலர் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *