தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரத்தை எடுத்த சின்னபுத்தூர் அருகே வெறி நாய்கள் கடித்து சுமார் எட்டு ச் லட்சம் மதிப்பிலான 50 ஆடுகள் பலி. சம்பவ இடத்திற்கு தாராபுரம் தாசில்தார் மற்றும் போலீசார் விசாரணை.

தாராபுரம்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சின்ன புத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியான பள்ளத்தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் மாகாளி என்பவர் வசித்துக் கொண்டு அந்த தோட்டத்தில் 80 க்கும் மேற்பட்ட ஆடுகளை பத்தாண்டுகளாக வளர்த்து வருகிறார். வழக்கம்போல் மாகாளி நேற்று மாலை தனது பட்டியில் ஆடுகளை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்று காலையில் வந்து பார்க்கும் போது தனது பட்டியில் 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை வெறிநாய்கள் கடித்து குதறி கொன்றது உள்ளது தெரியவந்தது.

பத்துக்கும் மேற்பட்ட வெறிநாய்கள் தனது பட்டிக்குள் உள்ள தரம்பு கீழ் மண்ணைப் பறித்து உள்ளே சென்ற ஆடுகளை கடித்த 50க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்துக் கொதறியது. இதை மதிப்பு சுமார் 8 லட்சம் ரூபாய் இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், இப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகிறது

இந்த கோழிப்பண்ணிகளின் தினந்தோறும் இறக்கும் கோழிகளை சாலையோரத்தில் பண்ணை உரிமையாளர்கள் வீசி செல்வதால் வெறிநாய்கள் சாலையோரத்தில் இறந்து கிடக்கும் கோழிகளை தின்றுவிட்டு வெறி நாய்களுக்கு உணவு கிடைக்காமல் இருக்கும்போது அருகில் உள்ள பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்துக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது

மேலும் சம்பவத்தை அறிந்த தாராபுரம் தாசில்தார் ராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து தாராபுரம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் கடந்த ஒரு வருடங்களாக பல ஆயிரம் ஆடுகளை கடித்து கொதறி பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் சாலை மறியல் செய்த நாய்களை தொடர் கதையாகவே உள்ளது இதனால் ஆடு வளர்க்கும் விவசாயிகள் வேதனையடைந்து உள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *