சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவைபுதூரில் உள்ள ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சர்வதேச யோகா தினத்தின் அதிகாரப்பூர்வ லோகோ வடிவத்தில் அணிவகுத்து அமர்ந்தனர்.
உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் யோகாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இதில், மனிதன், இயற்கை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு இடையேயான ஒற்றுமையை பிரதிபலிக்கும் சர்வதேச யோகா தின லோகோவின் வடிவத்திலேயே மாணவர்கள் அணிவகுத்து அமர்ந்தனர்..
தொடர்ந்து அனைவரும் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் பல்வேறு யோகாசனங்களை செய்து தங்களது திறமையை வெளிப்படுத்தினர் குறிப்பாக மாணவர்கள் யோகா தின லோகோ வடிவில் அமர்ந்து யோகாசனங்களை செய்தது அனைவரின் கவனத்தை ஈர்த்தது..
நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் தேவேந்திரன்,நிர்வாகி உதயேந்திரன்,செயலாளர் ரவிக்குமார்,வித்யாஸ்ரம் மழையர் பள்ளி நிர்வாக இயக்குனர் சௌந்தர்யா,ஆஸ்ரம் பள்ளி முதல்வர் சரண்யா,யோகா பயிற்சியாளர் சதீஷ் குமார் உட்பட , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர்.