துறையூர் ஜூன்-19
திருச்சி மாவட்டம் துறையூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் நடத்தும் அலுவலரும் முசிறி சார் ஆட்சியருமான சுஷ்ரீ சுவாங்கி குந்தியா தலைமையில் 1435 ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி கணக்கு முடித்தல்) இரண்டாம் நாள் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் சிவகுமார் முன்னிலை வகித்தார்.

இரண்டாம் நாளான நேற்றுமுன்தினம் (17-06-2026) உப்பிலியபுரம் வருவாய் பகுதிக்கான ஜமாபந்தி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் உப்பிலியபுரம் வருவாய் பகுதிகளில் உள்ள ஒக்கரை,
வெங்கடாசலபுரம்,உப்பிலியபுரம் (வடக்கு),உப்பிலியபுரம் (தெற்கு),கோட்டப்பாளையம் (மேற்கு),
கோட்டப்பாளையம் (கிழக்கு)பாலகிருஷ்ணம்பட்டி (மேற்கு)(கல்லாத்துக்கோம்பை, நல்லமாத்தி கோம்பை உட்பட)பாலகிருஷ்ணம்பட்டி (கிழக்கு),எ.பாதர்பேட்டை உள்ளிட்ட கிராம பஞ்சாயத்து பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா பெயர் மாற்றம்,புதிய குடும்ப அட்டை , இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, வாரிசு சான்று, கலைஞர் மகளிர் உதவி தொகை உள்பட சுமார் 127 கோரிக்கை மனுக்களை சார் ஆட்சியரிடம் கொடுத்தனர்.இந்த மனுக்களில் 15 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 112 மனுக்கள் மீது பரிசீலனை செய்து தீர்வு காணப்படும் என்று முசிறி சார் ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வட்டாட்சியர் வனஜா, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட வட்டாட்சியர் ராதா, பழங்குடியினர் நல மாவட்ட திட்ட அலுவலர் ரெங்கராஜீ,சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் பழனிவேல், ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சந்திர மவுலி, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் முத்து, மண்டல துணை வட்டாட்சியர்கள் ராமு, ராஜேந்திரன்,தேர்தல் பிரிவு வட்டாட்சியர் கோவிந்தராஜ், வட்ட வழங்கல் அலுவலர் சுந்தரி, உப்பிலியபுரம் வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள்,கிராம உதவியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *