கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்முதலாமாண்டு பட்ட வகுப்புகள் துவக்க விழா- 2026-2027 கரூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 30-ஆம் ஆண்டின் முதலாமாண்டு பட்ட வகுப்புகள் தொடக்க விழா அட்லஸ் கலையரங்கில் நடைபெற்றது.கொங்கு கல்வி அறக்கட்டளையின் தலைவர் கொங்குமாமணி வஸ்த்ர ரத்னா அட்லஸ் எம்.நாச்சிமுத்து விழாவைத் துவக்கிவைத்து தலைமையுரையாற்றினார்.
கொங்கு கல்வி அறக்கட்டளையின் செயலாளர் மற்றும் கல்லூரியின் தாளாளர் விசா.மா. சண்முகம் வரவேற்புரை ஆற்றினார்.முன்னாள் தாளாளர் அர்ச்சனா இராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். விழாவின் சிறப்பு விருந்தினராக பேசும் பூங்காற்று கவிதா ஜவகர் M.com., M.A., B.Lit. பேச்சாளர், எழுத்தாளர் மற்றும் ஆன்மீகச் சொற்பொழிவாளர் மாணவர்கள் ஆகிய நீங்கள் உங்களுக்கு கிடைத்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள், இலட்சியத்தை அடையும் வரை முயற்சியை கைவிடாதீர்கள், நீங்கள் சரித்திரம் படைக்க வேண்டும் இலக்குகளை நிர்ணயிக்க கற்றுக் கொள்ளுங்கள், உலக விஷயங்கள் முழுவதையும் அறிந்து கொள்ளுங்கள், எந்தவித சவால்களையும் எதிர்கொள்ள கற்றுக் கொள்ளுங்கள்,நேரம் மற்றும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள், படைப்பாற்றல் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். பெற்றோர்களை மதித்து அவர்களின் கனவை நினைவாக்குங்கள் என சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் அறக்கட்டளை முன்னாள் தலைவர். அம்மையப்பன், முன்னாள் துணைத் தலைவர் ஆர். மனோகரன், இணைச் செயலாளர் மற்றும் கல்வி ஆலோசகர் எஸ்.சேதுபதி, கொங்கு மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் பாலகுருசுவாமி, கொங்கு மெட்ரிக் பள்ளியின் தாளாளர் வாசுதேவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கல்லூரியின் துணை முதல்வர் எஸ்.கவிதா கல்லூரியில் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை கூறினார்.இந்நிகழ்வைத் தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் நிறைவாக கல்லூரியின் முதல்வர் முனைவர் எ. எஸ்.பூமிநாதன் நன்றியுரை யாற்றினார். துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்து சிறப்பித்தனர்.கல்லூரி மாணவர்கள் பலர் கலந்துக்கொண்டனர்