கோவையில், டாடா குழுமத்தின் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் நம்பகமான நகை விற்பனை பிராண்டான தனிஷ்க், தனது பிரத்யேக இயற்கை வைர நகைகள் கண்காட்சி நடைபெறுகிறது . உயர்தர இயற்கை வைர நகைகள் மற்றும் சாலிடையர் ஆபரணங்களை மையமாகக் கொண்டு நடத்தப்படும் இந்த பிரம்மாண்ட கண்காட்சியை, தனிஷ்க் ஜூவல்லரியின் வாடிக்கையாளர்களே தொடங்கி வைத்தனர்.

இயற்கை வைர நகைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு கண்காட்சி, ஜூன் 19 முதல் 21, 2026 வரை கோவை ரேஸ்கோர்ஸில் அமைந்துள்ள வெல்கம் ஹோட்டல் பை ஐடிசியில் நடைபெறுகிறது. தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சி, பார்வையாளர்களை நேர்த்தியான கைவினைத் திறன், காலத்தால் அழியாத வடிவமைப்புகள் மற்றும் உயர்மதிப்புடைய இயற்கை வைரங்களின் உலகிற்குள் அழைத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், தென்னிந்திய திருமணங்கள் மற்றும் விழாக்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள ‘சவுத் இந்தியன் ஸ்டடெட் கலெக்‌ஷன்’ பாரம்பரிய அழகையும், காலத்தால் அழியாத மதிப்பையும் ஒருங்கிணைக்கிறது. பாரம்பரியத்தை விரும்பும் மணமகள்கள் மற்றும் குடும்பங்களுக்கான சிறந்த தேர்வாக இந்த தொகுப்பு அமைகிறது.

கண்காட்சியை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. வைர மதிப்பில் 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுவதுடன், உங்கள் பழைய தங்கத்தை எந்த நகைக்கடையில் வாங்கப்பட்டிருந்தாலும் 9 காரட் மற்றும் அதற்கு மேற்பட்ட பழைய தங்க நகைகளுக்கு 0 சதவீத கழிவு சலுகையுடன் மாற்றிக் கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. (*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.)

இந்த கண்காட்சி, நகை ஆர்வலர்கள், தனிஷ்கின் வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்களை ஒரே மேடையில் இணைத்து, இயற்கை வைரங்களின் அருமை மற்றும் புதுமையான வடிவமைப்புகளின் சிறப்பை கொண்டாடும் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.

நிகழ்ச்சியில் டைட்டன் கம்பெனி லிமிடெட்டின் நகைப் பிரிவு பிராந்திய கிளஸ்டர் மேலாளர் திரு. சந்தோஷ், தனிஷ்க் கோவை ஏரியா பிஸ்னஸ் மேலாளர்கள் சிவரஞ்சனி மற்றும் நவீன் குமார் ஆகியோர் பேசுகையில் ,

“இந்த பிரத்யேக கண்காட்சியின் மூலம் கோயம்புத்தூர் மக்களுக்கு எங்களின் சிறந்த இயற்கை வைர நகைத் தொகுப்புகளை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். நேர்த்தியான கைவினைத் திறன், புதுமையான வடிவமைப்பு மற்றும் தரத்தில் சிறந்து விளங்கும் நகைகளை வழங்குவதே எங்களின் நோக்கம். கோயம்புத்தூர் எங்களுக்கு மிகவும் முக்கியமான சந்தையாகும். இங்கு வாடிக்கையாளர்கள் அளித்து வரும் வரவேற்பு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. இயற்கை வைரங்களின் அழகையும், ஒவ்வொரு நகையின் பின்னணியில் உள்ள தனித்துவமான கதைகளையும் அவர்கள் பெரிதும் பாராட்டி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. தரம், நம்பிக்கை மற்றும் சிறப்பான வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதில் தனிஷ்க் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது,” என்றனர்.

தனிஷ்க் பற்றி

டாடா குழுமத்தின் ஒரு அங்கமான தனிஷ்க், இந்தியாவின் மிகவும் நம்பகமான மற்றும் விரும்பப்படும் நகை பிராண்டுகளில் ஒன்றாகும். இருபது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், உயர்தர கைவினைத் திறன், பிரத்யேக வடிவமைப்புகள் மற்றும் தர உத்தரவாதத்திற்காக தனிஷ்க் அறியப்படுகிறது.

இந்திய பெண்களின் மாறிவரும் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் பாரம்பரியம் மற்றும் நவீனத்துவம் இணைந்த நகைகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. தங்கத்தின் தூய்மையை உறுதி செய்யும் மேம்பட்ட கரட் மீட்டர் வசதியுடன் வெளிப்படைத்தன்மையையும் வாடிக்கையாளர் நம்பிக்கையையும் தனிஷ்க் முன்னிறுத்தி வருகிறது.

தற்போது இந்தியா முழுவதும் 300-க்கும் மேற்பட்ட நகரங்களில் 500-க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களுடன் செயல்பட்டு வரும் தனிஷ்க், நகை விற்பனைத் துறையில் முன்னணி பிராண்டாக திகழ்கிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *