தென்காசி :ஜுன் – 21
தென்காசி வி டி எஸ் ஆர் சில்க்ஸ் மெடி அகடமி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகாஷ் ஐஏஎஸ் அகடமி ரெடி கல்வி மையம் இணைந்து பத்து மற்றும் பண்ணிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த அரசு, அரசு உதவி பெறும் , தனியார் , சிபிஎஸ்இ ( அனைத்து வகை ) உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பிரிவில் 100 பள்ளிகளைச் சார்ந்த 550 மாணவர்களுக்கு
தென்காசி விடிஎஸ்ஆர் மஹாலில் வைத்து பாராட்டு விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
இவ் விழாவிற்கு விடிஎஸ் .ஆர் நிர்வாக இயக்குநர் ரகுமான்கான் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் பேரா. பாலுமகேஷ்,TAF IAS Academy நிர்வாக இயக்குநர் மாரியப்பன், ஆசிரியர் ஆவுடை வினாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மதியழகன் அறிவியல் பாடல் பாடினார்.
பேரா மணிராஜ் வரவேற்றார் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து முனைவர் சுரேஷ் ஜாண் கென்னடி எடுத்துரைத்தார் இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் ஐஏஎஸ் அகடமி நிறுவனர் ஆகாச மூர்த்தி ” அறம் செய்ய விரும்பு ” விண்ணைத் தொட என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்திராக செங்கோட்டை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கே. என் . குரு அவர்கள் கலந்து கொண்டு சிகரம் தொட்ட மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி வாழ்த்தினார்.
தென்காசி வட்டார கல்வி அலுவலர் வசந்தி மணவர்களுக்கு பாராட்டுச் சான்று வழங்கினார்.
ரெடி கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் வில்சன் அருள் ஆனந்தன் பள்ளிகளுக்கு பாராட்டு கேடயம் வழங்கினார்.
இலஞ்சி ஆர். பி பள்ளி ஆசிரியரும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலருமான சுரேஷ் குமார் நிகழ்சியினை ஒருங்கிணைத்தார் ஆருஷியின் பாடல் சுந்தர் பலகுரல் பேச்சு அனைவரின் கவனத்தை ஈர்த்தது. நடுப்பேட்டை பள்ளி வாசல் இமாம் இசாக் மதுபாலா சித்தாய், சுரேஷ் தலைமை ஆசிரியர்கள் குலாம் , ரவி , பாதுஷா பெற்றோர்கள் ஆசிரியர்கள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் நூலகர் ராஜா நன்றி கூறினார்.