மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம்

தென்காசி ஜூன் 20

தென்காசி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அசோக்குமார் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில்
சிவகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மதுவிலக்கு மற்றும் அமலாக்கபிரிவு காவல்துறையினர் சிவகிரி பேருந்து நிலையம் அருகில் நின்ற சுப்பிரமணி என்பவரின் மகன் அழகுசாமி (21), நவராஜ் என்பவரின் மகன் மலரவன் (20) மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகியோரை சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 3.5 கிலோ எடை கொண்ட கஞ்சாவை (மதிப்பு ரூ. 35,000/-) பறிமுதல் செய்து, கைது செய்து வழக்கு பதிவு செய்து, வழக்கின் எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இளஞ்சிறாரை இளஞ்சிறார் நீதிக்குழுமம் முன்பு ஆஜர் செய்து கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர். விரைவாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினரை அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டுகின்றனர் போதை பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையில் விரைவாக செயல்படும் காவல்துறை என மக்கள் புகழாரம் சூட்டுகின்றனர் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *