துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டியில் காங்கிரஸ் கமிட்டி சார்பில்
காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர் கட்சி தலைவருமான ராகுல் காந்தியின் 56வது பிறந்த நாளை முன்னிட்டு மாநில பொது செயலாளர் இரா.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர் முனைவர் டாக்டர் நல்லசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும், அங்கன்வாடி குழந்தைகளுக்கும் சிலேட்டு, நோட்டு,பென்சில், இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதில் மாவட்ட தலைவர் பூபேஸ்,மாவட்ட செயலாளர் பெரியசாமி, தோழர் மோகன்தாஸ், பெருமாள்,ஜெயக்குமார், துரைராஜ்,மலர் செல்வம், முத்துகிருஷ்ணன், மண்ணச்சநல்லூர் முருகேசன், சங்கர்லால், வனிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர். ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு பள்ளி தலைமையாசிரியர் துரை செல்வம் பெரியாரிடம் சில்வர் போவணி வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர் சுமதி, நீதிமொழி, பள்ளி மாணவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள்,சத்துணவு அமைப்பாளர்கள், காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்