கும்பகோணம் ஹெரிடேஜ் லயன்ஸ் மற்றும் மாஸ் கல்லூரி லியோ சங்கத்தின் 2026- 2027 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளின் பணியேற்பு விழா விழா ஏ ஆர் ஆர் லைலா சுப்ரமணியம் மஹாலில் நடைபெற்றது.

புதிய நிர்வாகிகளாக தலைவர் ராம்குமார், செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ராஜேஷ், பொருளாளர் , ஆனந்தகுமார் மற்றும் அனைத்து நிர்வாகிகளையும்
மாவட்ட முன்னாள் ஆளுநர் லயன் டாக்டர் எஸ். வீரபாண்டியன் பதவியில் அமர்த்தி சிறப்புரை ஆற்றினார்.

தொடர்ந்து நலத்திட்ட உதவிகளான ஒரு ஆட்டுக்குட்டி, ஒரு தையல் இயந்திரம், உடல் ஊனமுற்ற ஒருவருக்கு ஊன்றுகோல், கும்பகோணம் மாநகராட்சியில் பணியுரியும் 7 துப்புறவு பணியாளர்களுக்கு புத்தாடைகள், செல்வமகள் சேவைத்திடத்தில் இருவருக்கு நன்கொடை, பாரதமாதா முதியோர் இல்லத்திற்கு ஒரு மாத காலத்திற்கு தேவையான மளிகைப்பொருட்கள் மற்றும் 10 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக சுமார் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள அனைத்து சேவைத் திட்டங்களையும் லயன் கே. ராமதுரை அவர்கள் துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மண்டலத்தலைவர் சுரேஷ், வட்டாரத்தலைவர் திரவியராஜ் உள்ளிட்ட அனைத்து லயன்ஸ் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புதிதாக பொறுப்பேற்ற லயன் ராம்குமார் ஏற்புரை ஆற்றினார். நிறைவில் செயலாளர் லயன் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *