நாகப்பட்டினம்,ஜூன்.21-
தமிழக முதலைமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான ஜோசப் விஜய் 52 வது பிறந்தாள் நாளை ஜூன் 22-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நாகை மாவட்டம் திருமருகல் மேற்கு ஒன்றியம் ஆதினங்குடியில் மேற்கு ஒன்றிய செயலாளர் வீரமணி தலைமையில் இலவச மருத்துவ முகாம் நடைப்பெற்றது. முகாமை மாவட்ட செயலாளர் சுகுமாறன் தொடங்கி வைத்தார்.

முகாமில் பொது மக்களுக்கு காய்ச்சல், இருமல், இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை உள்ளிட்ட பொது மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த முகாமில் திருமருகல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 500 – க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு பயனைடைந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *