தேனி, ஜூன் 26:
தேனி மாவட்டத்தின் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) பொறுப்பேற்றுள்ள பிரவீன் கௌதம் அவர்களை, கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். ஜெகநாத் மிஸ்ரா மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது, புதிய பொறுப்பில் சிறப்பாக பணியாற்றி மாவட்ட மக்களுக்கு சிறந்த காவல் சேவையை வழங்கிட தங்களது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தனர்.இந்த சந்திப்பின் போது, தேனி மாவட்ட ஆட்சியர் இரா. வைத்திநாதன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.