தமிழ்ச் செம்மல் விருது பெற்ற அறிஞர்களுக்கு கோவையில் பாராட்டு விழா தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற அறிஞர்கள் பொன்முடி சி. சுப் பையன், நம்பிக்கை நாகராசன் ஆகியோருக்கு கோவையில் பாராட்டு விழா நடைபெற்றது.
கோவை அரசு கலைக் கல்லூ ரியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், உலகத் தமிழ் காப்புக் கூட்டியக் சுத்தின் முதன்மை ஒருங்கிணைப் பாளருமான சி. சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
பேரூர் ஆதீனம் சாந்தலிங்கமரு தாசல அடிகளார், சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர அடி களார் ஆகியோர் சிறப்பு அழைப் பாளர்களாகப் பங்கேற்று, தமிழ் அறிஞர்கள் பொன்முடி சி.சுப் பையன், நம்பிக்கை நாகராசன் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து அருளாசி வழங்கினார்கள்.
இதில், உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கத்தின் நிர்வாகிகள் கவிஞர் இல.மணி, சமூகச் செயற்பாட்டாளர் செந்தமிழ் கனக சுப்பிரமணி, விசய் சண்முகம், பேராசிரியர் சித்ரா, கோவை கிருஷ்ணா, நித்தியானந்த பாரதி உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.