மாநில அளவிலான சிலம்பம் போட்டிக்கு கமுதி 17 மாணவ மாணவியர்தேர்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகளில் வெற்றி பெற்ற கமுதி மாணவர்கள் 17 பேர் மாநில போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்
தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2025-26-ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி ராமநாதபுரம் சீதக்காதி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 14, 17, 19 வயது பிரிவு மாணவர்கள், மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டியில் கமுதி விஜயபாண்டியன் சிலம்பாட்டக் குழுவில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்களில் கமுதி கே.என் மெட்ரிக் பள்ளி, கே.என்.ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கே.என்.பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ரஹ்மானியா மெட்ரிக் பள்ளி, அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த 17 மாணவ, மாணவிகள், தேர்வு பெற்றனர்

இவர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள் செல்லப்பாண்டி, ராமர், லட்சுமணன் ஆகியோருக்கு மாணவர்களின் பெற்றோர்கள், மற்றும் பள்ளிகள் சார்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. இந்த 17 மாணவ, மாணவிகளும் வரும் ஜனவரி மாதம் தேனியில் நடைபெறும் மாநில அளவிலான சிலம்பப் போட்டிக்குத் தேர்வு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *