திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த செய்யாறு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புரிசை கிராமத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் மாவட்ட சுகாதார அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
இவ் விழாவினை ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்தரணிவேந்தன், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
அனக்காவூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சி.கே.ரவிக்குமார், மாவட்ட துணை செயலாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக, ஆரணி பாராளுமன்ற மன்ற உறுப்பினர் எம்.எஸ் தரணிவேந்தன், செய்யார் சட்டமன்ற உறுப்பினர் ஜோதி ஆகியோர் கலந்து கொண்டு, மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகளை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். இதைத் தொடர்ந்து பயனாளிகளுக்கு மருத்துவம் தொடர்பான சான்றிதழ்கள், கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ பெட்டகம் வழங்கி சிறப்புரையாற்றினர்.
இம் முகாமில் கிராம மக்களுக்கு பல்வேறு உயர் சிகிச்சைகளுக்கான ஆலோசனைகள், மருந்து மாத்திரைகள் எடுக்கும் முறைகள் குறித்து மருத்துவர்கள் மூலம் விவரங்கள் – ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
முகாமில் வெம்பாக்கம் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் ஜே.சி.கே.சீனுவாசன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி தலைவர் புரிசை சிவக்குமார், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ராம் ரவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். வட்டார மருத்துவ அலுவலர் ஷர்மிளா உள்ளிட்ட அலுவலர்கள் 200 க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் கலந்துக் கொண்டு பயனாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.