தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஆத்தாளுர் கிராமத்தில் எழுந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயம் உள்ளது. இக்கோவிலில் ஆனி மாத பெரும் திருவிழா கடந்த ஜூன் 23ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியோடு தொடங்கியது. இதனை தொடர்ந்து சாமிக்கு அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு பூஜைகளும் தினந்தோறும் நடைபெற்று வந்தன. இந்நிலையில் ஒன்பதாம் நாளான இன்று மாலை தேரோட்ட நிகழ்ச்சி அதி சிறப்பாக நடைபெற்றது. இந்த தேரோட்ட நிகழ்ச்சிக்கு பேராவூரணியை சுற்றியுள்ள 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது குடும்பத்தினருடன் வருகை தந்து தேரோட்ட நிகழ்ச்சியை கண்டு களித்து அம்மனின் அருள் பெற்று சென்றனர்.

பேராவூரணி செய்தியாளர் நீலகண்டன் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *