தேனி, ஜூலை 3:

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், வடுகப்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு வீரிய காரி பெருமாள் சுவாமி திருக்கோயிலில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இரண்டாவது மகா கும்பாபிஷேகம் மற்றும் திருநன்னீராட்டு விழா ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2026) வியாழக்கிழமை காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவில், என். கண்ணன் பட்டாசாரியார் (லட்சுமி நாராயண கோவில் அர்ச்சகர்) தலைமையில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க, புனித கலச நீரால் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை விழாக்குழுத் தலைவர் டி.எஸ். சேகர் தலைமையில், கும்பாபிஷேக திருப்பணிக் குழுவினர் முனியாண்டி பரம்பரை பூசாரி அண்ணாதுரை, வெங்கட் பெருமாள், சுதா, கருப்பையா, நாகராஜ் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

மேலும், வடுகப்பட்டி, காமக்கவுண்டன்பட்டி மற்றும் மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ஊர் பங்காளிகள் மற்றும் கௌரவ ஆலோசகர்களான பாலகிருஷ்ணன், சந்திரசேகர், சுப்பிரமணி, பொன்ராஜ் உள்ளிட்ட பலரும் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.

அன்னதானம் மற்றும் வரவேற்புக் குழுவின் சார்பில் ஹரிபாபு, குருசாமி, பி.டி.எஸ். சரவணன், பகவதிராஜ், ஜானகிராம், சீனிவாசன், திருமுருகன், சங்கர் பாபு உள்ளிட்டோர் தலைமையில் பக்தர்களுக்கு குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும் நடைபெற்றது.

இந்த மகா கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து விழாவை சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *