கோவை மாநகர குரும்பா சங்கம் சார்பில் 117 வது ஆண்டு ஸ்ரீ பெருமிழலைக் குறும்ப நாயனார் குருபூஜை விழா பேரூர் பகுதியில் நடைபெற்றது.

சங்கத் தலைவர் ஒன்னப்பன் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஓதிமலை ஆதீனம் சிவனேச அடிகளார் அருளுரை வழங்கினார்தமிழ்நாடு மாநில குரும்பா முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் ஆர். கிருஷ்ணசாமி தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் சீனிவாசன் கவுரவ அழைப்பாளராக பங்கேற்றார்.விழாவையொட்டி, 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற குரும்பா சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மேலும், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.தொடர்ந்து, பழங்குடியினரின் சமூக வாழ்க்கை, சடங்குகள் மற்றும் வனச் சூழலை தனது ஓவியங்கள் மூலம் ஆவணப்படுத்தியதற்காக பத்மஸ்ரீ விருது பெற்ற ஓவியர் கிருஷ்ணன் குடும்பத்தினர் விழாவில் பாராட்டப்பட்டனர்

அவர்களது குடும்பத்திற்கு நிதியுதவியும் வழங்கப்பட்டது விழாவில் குரும்பா சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட குரும்பா சமுதாயத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.. .

மாணவர்களின் கல்வி, விளையாட்டு மற்றும் சமூக முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *