அரியலூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு அப்பாவி தமிழர்கள் மூன்று பேரை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறையினரை கண்டித்து அரியலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

ஆர்ப்பாட்டத்தில் அப்பாவி தமிழர்களை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கர்நாடக மாநில அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி காவிரியில் நீரை திறந்து விட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி அரியலூர் வழக்கறிஞர் சங்கத்தினர்

நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் இரா மனோகரன் தலைமை வகித்தார் செயலாளர் எம் ராஜா பொருளாளர் கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

மேலும் வழக்கறிஞர்கள் ராமகோவிந்தராஜன் முன்னாள் அரசு வழக்கறிஞர் சண்முகம் சுந்தர பாரதி பரமேஸ்வரன் மூகாம்பிகை ஏசி கதிரவன் செல்லசுகுமார் முன்னாள் அரசு வழக்கறிஞர் பாலமுருகன் செந்தில் ராஜா கொளஞ்சியப்பன் எஸ் தனலக்ஷ்மி பாலாஜி சிவாஜி அருணன் உட்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *