தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஓய்வூதியதாரர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை ஓய்வூதியதாரர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் இரா வைத்திநாதன் தலைமையில் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அவர்களிடம் ஏற்கனவே ஓய்வூதியதாரர்களிடமிருந்து பெறப்பட்ட 45 மனுக்கள் தொடர்பாக மனுதாரர்கள் முன்னிலையில் தொடர்புடைய அலுவலர்களிடம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்ததுடன் ஓய்வூதியதாரர்கள் முன் வைத்த கோரிக்கைகளான ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு பணிக்கொடை மருத்துவ காப்பீடு அகவிலைப்படி ஓய்வூதியப் பணப்பலன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக அரசு அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து உரிய தீர்வு வழங்கிட வேண்டும் என்று அரசு அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுரை வழங்கினார் இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப ராஜகுமார் மாவட்ட கருவூல அலுவலர் கோமதி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் பாரதி கணக்குகள் ராமகிருஷ்ணன் பொது உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்