அலங்காநல்லூர். ஜுலை.06 –
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளசின்னஊர்சேரிகிராமத்தில் அமைந்துள்ள
ஸ்ரீ காக்காயன், ஸ்ரீகருப்புசாமிஸ்ரீநல்லபிறவிஅம்மன், பரிவார தெய்வங்களின் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் முதல் நாள் கோவில் முன்பு அமைக்கப் பட்டிருந்த யாகசாலையில் மங்கள இசையுடன் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் நடந்தது மறுநாள் யாகசாலையிலிருந்து அழகர்மலை, காசி ராமேஸ்வரம், உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து ஏற்கனவேகொண்டு வரப் பெற்ற புனித தீர்த்த குடங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோபுர உச்சிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிவாச்சார்யார்களின் வேதமந்திரங்களுடன் தீர்த்தம் குடம் குடமாக கலசத்தில் ஊற்றப்பட்டது அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு தீபாராதனைகள் நடந்தது. இந்த கும்பாபிஷேக விழாவினை காண உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கிராமபொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பூஜை மலர்களும் புனித தீர்த்தமும் அன்னதானமும் வழங்கப்பட்
டது. விழா ஏற்பாடுகளை சின்னஊர்சேரி ஸ்ரீ காக்காயன்,கருப்புச்சாமி,நல்லபிறவிஅம்மன் பங்காளிகள்வகையறா செய்திருந்தனர்.கும்பாபிஷேகத்துக்கு முதல் நாள் இரவு வள்ளி கும்மி கலை நிகழ்ச்சி கோவில் அருகே நடைபெற்றது.