மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள பாறைப்பட்டி கிராமத்தில், சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த பொதுமக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார்.

அப்போது, தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) கிளைச் செயலாளர் ராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் கருப்பையாவுக்கு மலர்மாலை அணிவித்து, கைத்தறி ஆடை போர்த்தி சிறப்பான வரவேற்பு அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் விஜய்ஹரிஷ், கிருஷ்ணமூர்த்தி, வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் கார்த்திக், தனசேகரன், தர்மராஜா, இணைச் செயலாளர் ராமநாதன், முத்து, நகர செயலாளர்கள் ரஞ்சித், புகழ், அலங்காநல்லூர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் பாலாஜி, மறவபட்டி கிளைச் செயலாளர் ராஜா, வலையபட்டி கிளைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினர் கருப்பையாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *