கோவையில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில், டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் (“Hope & Health – A Cancer Free Tomorrow”) என்ற தலைப்பில் புற்றுநோய் விழிப்புணர்வு ,நிகழ்ச்சி ரேஸ் கோர்ஸ் மீடியா டவர் அருகில் நடைபெற்றது…
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கே.ஜி. மருத்துவமனை தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் ஜி. பக்தவத்சலம், அரவிந்த் ஐ.வி.எப் மருத்துவமனை, மருத்துவர்கள் அரவிந்த் சந்தர் மற்றும் ரேஷ்மா ஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டு, புற்றுநோய் விழிப்புணர்வு குறித்தும், காப்பீடு செய்வதால் உள்ள நன்மைகள் குறித்தும் பேசினர்…
குறிப்பாக புற்றுநோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல் மற்றும் உரிய சிகிச்சை மூலம் உயிர்களை காப்பாற்ற முடியும் என்ற விழிப்புணர்வு பொதுமக்களுக்கு தேவை என தெரிவித்தனர்…
இந்த நிகழ்ச்சி தொடர்பாக டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஹெட் ஆஃப் ஏஜன்சி, ராஜேஷ் குமார், டைரக்டர் ஆஃப் ஏஜன்சி நாகராஜ் ஆகியோர் பேசுகையில், ,, டாடா ஏஐஏ நிறுவனத்தின் ‘சம்பூர்ணா கேர்’ (Sampoorna Care) திட்டம் புற்றுநோய் கண்டறியப்பட்டவர்களுக்கு,நிதி பாதுகாப்பு மட்டுமின்றி, புற்றுநோய் சிகிச்சை காலத்தில் நோயாளிகளும், அவர்களது குடும்பத்தினரும் எதிர்கொள்ளும் சவால்களை குறைக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுவதாகவும் தெரிவித்தனர்..
நிகழ்ச்சியில், நிறுவன முகவர்கள், மருத்துவர்கள், புற்றுநோய் விழிப்புணர்வு ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.