தேனி மாவட்ட வாணியர் சங்கத்தின் நிர்வாகக் குழு கூட்டம் தேனி மாவட்ட வாணியர் சங்கத்தின் நிர்வாகக் குழு கூட்டம் அதன் தலைவர் ஆர் சுந்தரவடிவேல் தலைமையில் செயலாளர் சேகர் பொருளாளர் கனகராஜ் முன்னிலையில் நடைபெற்றது

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்2024- ம் ஆண்டு முதல் நடப்பு 2026- ம் ஆண்டுக்கான மாதாந்திர சந்தா தொகையான ரூ. 100/- வீதம் இரண்டு ஆண்டு சந்தா தொகை. ரூ. 2400/- 25-7-2026 ம் தேதிக்குள் தேனி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் செலுத்தி அவசியம் ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்


வருகின்ற மாதங்களில் தேனி மாவட்ட அளவில் கல்வி அறக்கட்டளை தொடக்கம், கல்வி பரிசளிப்பு விழா, ஜாதக பரிவர்த்தனை விழா சிறப்பாக நடைபெற இருப்பதால் அந்தந்த ஊர்களில் உள்ள முக்கிய பொறுப்பாளர்கள் வசம் சமுதாய மாணவ, மாணவிகள் 10- ம், 12- ம் வகுப்பு 2025-2026) முடித்த கல்வியாண்டில் மாணவச் செல்வங் கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ் நகலை ஒப்படைக்க வேண்டும்நமது சமுதாயத்தில் மிகவும் நலிவடைந்த வயது மூப்பு காரணமாக உற்றார்,

உறவினர்கள் ஆதரவு இல்லாமல் இருப்பவர்களின் விவரங்களையும் அந்தந்த ஊர் முக்கிய பொறுப்பாளர்கள் சேகரிக்க வேண்டும்மாநில பொதுக்குழுவில் சேர விருப்பம் உள்ள சமுதாய சொந்தங்கள் தங்களின் விவரங்களை அந்தந்த ஊர் முக்கிய பொறுப்பாளர்களிடம் தெரியப்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் செய்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *