திண்டுக்கல், ஜூலை 6:

திண்டுக்கல் யூனியன் கிளப் உள் அரங்கில் திண்டுக்கல் மெட்ரோ லயன்ஸ் சங்கத்தின் 2026–2027 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் சங்கத்தின் புதிய தலைவராக டாக்டர் எஸ். சகாயசெல்வராஜ், செயலாளராக லயன் எம். சுந்தர், பொருளாளராக லயன் கே. சுகுமாரன் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள், மூத்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சச்சிதானந்தம் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். மேலும், சமூக சேவையில் லயன்ஸ் சங்கம் தொடர்ந்து சிறப்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

இறுதியில், புதிய நிர்வாகிகள் சமூக நலப் பணிகளை மேலும் தீவிரப்படுத்தி, மக்களுக்கு பயனுள்ள பல்வேறு சேவைத் திட்டங்களை செயல்படுத்த உறுதியளித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *