தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்து உயிர்தப்பிய ஓட்டுனர்.!
குண்டடம்
அருகே, சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
குண்டடம் அருகே, திருப்பூர்-தாராபுரம் நான்கு வழிச்சாலை, வேங்கிபாளையம் பகுதியில், மதுரையில் இருந்து திருப்பூர் நோக்கி தின்பண்டங்கள் ஏற்றிக் கொண்டு, சனிக்கிழமை மாலை ஒரு சரக்கு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு ஆட்டோவை, பிரவீன் என்ற ஓட்டுநர் ஓட்டிச் சென்றார்.
அப்போது, சரக்கு வாகனம் எதிர்பாராத விதமாக சாலையோரம் உள்ள கல்லில் மோதி, சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து சம்பவம் குறித்து குண்டடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.