முதல்வர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்-எம்.எல்.ஏ. பாலமுருகன் தலைமையில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் இலவச மருத்துவ முகாம்
தமிழ்நாட்டின் முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ச. ஜோசஃப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பூர் தட்டான் தோட்டம் 51-வது வார்டு த.வெ.க. கிளை சார்பாக மாபெரும் நலத்திட்ட உதவிகள் மற்றும் இலவச மருத்துவமனை முகாம் நடைபெற்றது. தட்டான் தோட்டம் பகுதியில் உள்ள ஸ்ரீ கலைமகள் வித்யாலயா மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் நடந்த இந்த மாபெரும் பிறந்தநாள் விழாவில், திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், தெற்கு தொகுதி மாவட்ட செயலாளருமான பாலமுருகன் தலைமையேற்று மருத்துவ முகாமை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினர்… பொதுமக்களுக்கு அரசி உள்ளிட்ட அத்யாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. இலவச மருத்துவ முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு முழு உடல் பரிசோதனைகளானது செய்யப்பட்டன. உடல் குறைபாடுள்ளோருக்கு இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கினர். கண் புரை கண்டறியப்பட்ட 50க்கும் மேற்பட்டோருக்கு இலவச கண் புரை அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்தனர்… த.வெ.க. நிர்வாகிகள் தொண்டர்கள் ரத்த தானம் செய்தனர்.
விழாவில் பேசிய எம்.எல்.ஏ. பாலமுருகன், “தமிழ்நாட்டின் முதல்வரும், கழக தலைவருமான விஜய் அவர்களின் பிறந்தநாளில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது மற்றும் இலவச மருத்துவ முகாம் நடத்துவது தங்களின் கடமையாக கருதுகிறோம் என தெரிவித்தார். ஆட்சிக்கு வரும் முன்னதாகவே பல ஆண்டுகளாக இதுபோன்ற நற்பணிகளை செய்து வருகிறோம் என தெரிவித்த எம்.எல்.ஏ. பால முருகன், ஆட்சி அரியணையில் இருந்து ஏராளமான நலப்பணிகளை வீரியமுடன் செய்ய இருப்பதாக தெரிவித்தார். எந்த நேரத்திலும், எப்போது வேண்டுமானாலும் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தயாராக இருப்பதாகவும், பொதுமக்களின் சேவையை பிரதானமாகக் கொண்டு முதல்வர் விஜய் அவர்களின் வழியில் மக்கள் பணியாற்றுவோம் என்றும் அவர் தெரிவித்தார்… இந்த விழாவில் த.வெ.க.வை சார்ந்த என்.சி.ஆர். முரளி (எ) மணிகண்டன், சதீஸ், ராஜெசேகர், விஜயன், சிவகுமார், ராஜு, ரமேஷ், கபிலன், சரவணன், பிரபு, சந்தியா, செளமியா, வெங்கடேஷ், பெரியசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
புட்நோட்…..
மருத்துவ முகாமை துவங்கி வைத்த எம். எல்.ஏ. பாலமுருகன் இலவசமாக மருந்துகள் வழங்கினார்.