தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சி பகுதியில் மட்டும் சுமார் 75 ஆயிரம் பேர் வசித்து வரும் நிலையில் சுரண்டையில் படுக்கை வசதியுடன் கூடிய 24 மணி நேர அரசு மருத்துவமனை இல்லை.
ஆகவே சுரண்டையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் சுமார் 40 வரேடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் தற்போது சுரண்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மட்டும் செயல்பட்டு வருகிறது, அதிலும் சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் சுரண்டை, சிவகுருநாதபுரம், கழுநீர்குளம், வீரகேரளம்புதூர், மேலப்பாவூர், கலிங்கப்பட்டி, ராஜகோபாலபேரி, ராஜபாண்டி, இடையர்தவணை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட துணை சுகாதார நிலையங்கள் உள்ளன இப்பகுதியின் மக்கள் தொகை சுமார் 1,60,000 என கணக்கீட்டுள்ளது.
இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை பெற்று வருவதுடன் சுகர், பிரஸர், ஆஸ்துமா, கொலஸ்டிரால், எலும்பு, இதயம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மாதாந்திர மருந்துகளை பெற்று வருகின்றனர் இல்லம் தேடி மருத்துவம் சிகிச்சைக்கும் இங்கிருந்துதான் மருந்துகள் வழங்கப்படுகிறது.
ஆனால் சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த இரண்டு மாதங்களாக மருந்து மாத்திரைகள் தட்டுப்பாட்டாகவே உள்ளன. ரெகுலராக போட வேண்டிய மாத்திரைகளில் இரண்டு அல்லது மூன்று மாத்திரைகள் கிடைப்பதில்லை அவைகளை தனியார் மருந்தகங்கள் மற்றும் வீரகேரளம்புதூர், ஆயக்குடி அரசு மருத்துவமனையில் சென்று வாங்க வலியுறுத்துகின்றனர் மேலும் இல்லம் தேடி மருத்துவம் திட்டமும் முடங்கும் நிலை உள்ளது.
இதனால் நோயாளிகள் மற்றும் முதியோர் பல பகுதிகளுக்கு செல்ல முடியாமல் மாத்திரைகளை தொடர்ந்து போட முடியாமல் உள்ளனர். ஏற்கனவே கடந்த சில வாரத்திற்கு முன்பு இரவில் பாம்பு கடித்த நபருக்கு சரியான சிகிச்சை கிடைக்காததால் அவர் இறந்ததும் தற்போது சுரண்டை பகுதியில் மஞ்சள் காமாலை நோயினால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து மாத்திரைகள் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் மேலும் சிரமத்திற்கு உள்ளாவதும் குறிப்பிடத்தக்கது
ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுரண்டை அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைத்து மருந்துகளும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கவும் சுரண்டையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைக்கவும் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்