அலங்காநல்லூர், ஜூலை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் புதிய நிர்வாகிகளை அறிவித்ததைத் தொடர்ந்து, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரிய ஊர்சேரி கிராமத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் தமிழாளன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் அதிவீரபாண்டியன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மண்டல செயலாளர் கலைவாணன் மற்றும் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாநில செயலாளர் சிந்தனைவளவன் ஆகியோர் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர்கள் ராமச்சந்திரன், கீதா, வடகால் பூமி, திருமாவாசு, சோலைமலை, செய்தி தொடர்பாளர் பதினெட்டாம்படி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் லட்சுமணன், மாவட்ட மகளிரணி செயலாளர் காமாயி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும், இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை செயலாளர்கள் வாடிப்பட்டி வளவன், ஜெயலட்சுமி, ஒன்றிய செயலாளர்கள் கடல்கேசன், ராஜாராம், சுரேஷ், கச்சைகட்டி சுரேஷ், கண்ணன், நகர செயலாளர் சிவராமகிருஷ்ணன் மற்றும் பிரபாகரன், யுவராஜா, சுரேந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநில நிர்வாகிகள் அழகுமலை, காமராஜ், பாலகிருஷ்ணன், ஜெயபிரகாஷ், சிதம்பரம், மகளிரணி நிர்வாகி சரோஜா மற்றும் முகாம் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *